எங்கே அந்த வெண்ணிலா
எந்த ஒரு படைப்பும் படிக்க வேண்டும் என்ற ஈர்ப்பை உண்டாக்கும் சக்தி முதலில் அதன் தலைப்புக்கு இருக்க வேண்டும். எங்கே அந்த வெண்ணிலா என்று கேள்வி மூலமே வசிகரமாக வாசகர்களை உள்ளே இழுத்து விட்டார் இந்த நூலின் படைப்பாளி திரு. குரு அரவிந்தன். இங்கேயே முதல் வெற்றி அவருக்குக் கிடைத்து விட்டது.
உள்ளே நுழைந்தால் படித்து முடிக்கும்வரை கொஞ்சம்கூட விறுவிறுப்பு குறையவில்லை. மிகவும் அழகாகக் கதையைக் கையாண்டு சுவை மாறாமல் பரிமாறியிருக்கின்றார்.
ஏந்த ஒரு படைப்புக்கும் கதாபாத்திரங்களின் குணாதியம் முக்கியம். அதை அழுத்தமாக உருவாக்கிவிட்டால், கதை தானாக நகரும். புடிப்பவர்கள் மனதில் பசை ஒட்டிக் கொள்ளும். இதை நன்றாகப் புரிந்து கொண்ட குரு அரவிந்தன் தனது படைப்பை திறம்பட உருவாக்கியிருக்கின்றார்.
உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து வார்ததைகளை இயல்பாகக் கோர்த்து யதார்த்த நடையில் கதை மாந்தர்களை வாசகர் மனதில் வாழ வைத்திருக்கின்றார்.
குரு அரவிந்தனின் படைப்புகள் நிறைய வரவேண்டும். சுpறந்த ஒரு எழுத்தாளனுக்கு உரிய தகுதி குரு அரவிந்தனுக்கு நிறையவே இருக்கின்றது. உலகம் போற்றும் பெரிய படைப்பாளியாக அவர் வளர்ந்து உச்சிக்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இந்தச் சந்தர்ப்பத்தில் குரு அரவிந்தனை இதயபூர்வமாக வாழ்த்தி, இது போன்ற படைப்பாளிகளை ஊக்குவித்துவரும் மணிமேகலைப் பிரசுரத்திதாருக்கு ஒரு படைப்பாளி என்ற முறையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேசமுடன்
தேவிபாலா
அசோக் நகர். சென்னை – 600 083.
Comments
Post a Comment