Navaraathri in Toronto-2024

 


ரொறன்ரோவில் நவராத்திரி விழா கொண்டாட்டம்







குரு அரவிந்தன்

சென்ற ஞாயிற்றுக்கிழமை அக்ரோபர் 13, 2024 அன்று ரொறன்ரோவில் அல்பியன் வீதியில் உள்ள Thistletown Community Centre  மண்டபத்தில் கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் நவராத்திரி விழா – 2024  சிறப்பாக நடைபெற்றது. திருமதி றஞ்சனி மகேந்திரராசா தலைமை தாங்கிய இந்த நிகழ்வில் ரொறன்ரோ பிரபல பல்வைத்தியர் சுமதி செல்வா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக Constituency officer Ms. Michelle Telfeyan, Councillor Vincent Crisanti, Mr. Dave Sound  ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கிராமத்து வதனம் செயற்குழுவினரால் மங்கள விளக்கேற்றப்பட்டு, தமிழத்தாய் வாழ்த்து, கனடாப்பண், அமைதி வணக்கம் ஆகியன இடம் பெற்றன. திருமதி வேல்விழி அருள்மாறன் அவர்களின் மாணவிகளான செல்லி. லதிஸா தயாளன், செல்வி பைரவி அருள்மாறன், செல்வி. அபிநயா சிவதாஸ் ஆகியோரால் தமிழ்த்தாய் வாழ்த்து, கனடாப்பண் ஆகியன இசைக்கப்பெற்றன. தொடர்ந்து சரஸ்வதி பூசையுடன் நிகழ்வு ஆரம்பமானது. ஆசிரியர் திருமதி விமலா புசுப்பநாதன் பூசையைக் கொண்டு நடத்தினார். செல்வி. அப்சரா சயந்தன், செல்வி. அர்ச்சயா வீரபத்திரஐயர் ஆகியோரால் சகலகலாவல்லிமாலை, திருப்புகழ் ஆகியன இசைக்கப்பெற்றன. இதைத் தொடர்ந்து திருமதி இளவரசி செந்தில்குமார் அவர்களின் வரவேற்புரையும், திருமதி கமலவதனா சுந்தா அவர்களின் ஸ்தாபகர் உரையும், திருமதி றஞ்சனி மகேந்திரராசா அவர்களின் தலைமை உரையும் இடம் பெற்றன.




அடுத்து கிராமத்து வதனம் காப்பாளர்களான பேராசிரியர் இ. பாலசுந்தரம், திரு. நவா கருணரட்ணராசா ஆகியோரது வாழ்த்துரைகளும், எழுத்தாளர் குரு அரவிந்தன், கவிஞர் அகணி சுரேஸ், திருமதி நாகேஸ்வரி சிறிகுமரகுரு, செல்வன் தருண் செல்வம், திரு. வி. என். மதியழகன் ஆகியோரது உரைகளும் இடம் பெற்றன. அதைத் தொடர்ந்து ‘விளக்கு வைப்போம்’ என்ற கிராமத்து வதனப் பெண்களின் நடனமும், சிறுமிகளின் ‘தீப நடனமும்’ இடம் பெற்றன. அடுத்து தமிழ் மொழி பற்றி செல்வி அலேனா நிலாந்தன், செல்வி காசினி நிலாந்தன் ஆகியோரது உரை இடம் பெற்றது. செல்வி பிரவீனா செந்தூரன் செல்வி. அதீசா திலீபன் ஆகியோர் ஈழத்துப் பாடலுக்கு நடனமாடினர். தொடர்ந்து செல்வி பிரகதி குகானந்தசர்மாவின் வயலின் இசையும், பபீசா பிபீசனாவின் பியானோ இசையும் இடம் பெற்றன.


திருமதி சாந்தினி முத்துத்தம்பி அவர்களின் பாட்டைத் தொடர்ந்து திருமதி விமலாதேவி புசுப்பநாதனின் நன்றியுரை இடம் பெற்றது. திருமதி நவகீதா முருகண்டி அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். அரங்குநெறியாளராக செல்வி. பிரவீனா இராசையா பணியாற்றினார். விழாவிற்கு வருகை தந்தோருக்கு சிற்றுண்டி, தேனீர் வழங்கப்பட்டு, விழா இனிதே முடிவுற்றது.

Comments