Starship
விண்வெளி சார்ந்து இரண்டு சாதனைகள் சமீபத்தில் நடந்திருக்கின்றன. ஒன்று எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதித்தது. அதாவது ஸ்ரார் சிப் என்ற அவர்களது விண்கலம் ரொக்கட்டுடன் தரை இறங்கிய போது இரண்டு செயற்கை கைகள் அதைக் கவனமாகத் தாங்கிக் கொண்டன. இதுவரை காலமும் ரொக்கட்டுகள் ஒரு முறைதான் பாவிக்கப்பட்டன. அதன் பின் அதைப் பாவிக்க முடியாததால் பாதுகாப்பாகக் கடலில் வீசப்பட்டன. எலான் மஸ்கின் இந்தப் புதிய சாதனையால் பல கோடி டொலர்களைச் சேமிக்ககூடியதாக இருக்கின்றது. கவனமாகத் தரை இறங்கிய ரொக்கெட்டுகள் மீண்டும் பாவிக்கக் கூடியதாக இப்போது இருக்கின்றன. பாராட்டுகள்.
அடுத்த சாதனை வாயேஜர் 1 என்ற நாசாவின் விண்கலம் இன்று ஒரு மிகத் தொலைவான மைல்கல்லை எட்டியுள்ளது. விண்வெளியில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பயணித்த பிறகு, அது இப்போது பூமியிலிருந்து ஒரு ஒளி நாளைத் தாண்டி இருக்கின்றது. அதாவது 16 பில்லியன் மைல்களுக்கு அப்பால் சென்று கொண்டிருக்கிறது. பூமியைக் கடந்து மிகத் துரம் சென்ற, மனிதனால் உருவாக்கப்பட்ட மிகத் தொலைவான பொருள் இதுவாகும். இந்த ஒரு ஒளிநாளைக் கடப்பதற்கு இப்போதுள்ள வேகத்தில் சுமார் 50 வருடங்கள் எடுத்திருக்கின்றன. ஆனாலும் விண்வெளிச் சாதனைகளில் இது ஒரு மைல் கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
புராக்ஸிமா சென்டாரி என்பது சூரியனுக்கு அடுத்தபடியாக பூமிக்கு மிக அருகில் உள்ள விண்மீன் ஆகும். இது பூமியிலிருந்து 4.25 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இன்று உள்ள இந்த வேகத்தில் 4.25 ஒளி ஆண்டை அடைவது என்பது மனிதனால் முடியாது, ஆனால் செயற்கைத் தொழில் நுடபத்தின் உதவியுடன் மனிதனின் கண்டுபிடிப்பான ரோபோக்களால் சென்றடைய முடியும்.
On 18 November 2026, Voyager 1 became the first human-made object to reach one light-day from Earth, about 25.9 billion kilometres away. At that distance, its radio signal takes 24 hours to reach us.



Comments
Post a Comment